அயோடின் குறைபாடு


உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும் உப்பில் அயடின் உள்ளது என்று தெரிந்திருந்தாலும், உடலில் அயடின் குறைந்தால் இவ்வாறு உங்கள் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவில் உப்பு சேர்க்கும்போது பலரும் செய்யும் தவறுகளால், உப்பில் உள்ள அயடின் சிறிது அழிந்துவிடுகிறது. அயடின் கலந்த உப்பை சரியாகப் பயன்படுத்தி, இவ்வாறு நடப்பதைத் தடுப்பது எப்படி? நமது உடலுக்குக் கிடைக்கும் […]

உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உணவில் உப்பு சேர்க்கும்போது செய்யும் தவறுகளால் கழுத்து வீங்கக்கூடும்

உப்பில் அயடின் உள்ளது என்று தெரிந்திருந்தாலும், உடலில் அயடின் குறைந்தால் இவ்வாறு உங்கள் கழுத்து வீங்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உணவில் உப்பு சேர்க்கும்போது பலரும் செய்யும் தவறுகளால், உப்பில் உள்ள அயடின் சிறிது அழிந்துவிடுகிறது.

அயடின் கலந்த உப்பை சரியாகப் பயன்படுத்தி, இவ்வாறு நடப்பதைத் தடுப்பது எப்படி?

நமது உடலுக்குக் கிடைக்கும் அயடினின் மிக முக்கிய வேலை, தைரொட்சின்  என்னும் ஓமோனை உற்பத்தி செய்வதாகும்.

இந்த ஓமோனை உற்பத்தி செய்யும் தைரொய்டு சுரப்பி அமைந்திருப்பது உங்கள் கழுத்தின் முன்பகுதியிலாகும்.

உடலில் அயடின் குறைந்து தைரொட்சின் உற்பத்தியாகும் அளவு குறைந்தால், தைரொய்டு சுரப்பி வீக்கமடைந்து, கண்டக்கழலை  (Goitre) அல்லது தொண்டை வீக்கம் எனப்படும் நிலை ஏற்படும்.

ஆயினும் இப்படி தைரொய்டு சுரப்பி வீங்குவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இந்த கண்டக்கழலை எனப்படும் நிலைமைக்கு மேலாக, உடம்பில் அயடின் குறைந்தால், 

  • உங்களுக்கு மந்த நிலை ஏற்படுதல் மற்றும் இனப்பெருக்கப் பிரச்சினைகள் உண்டாகலாம்.
  •  இளம் பிள்ளைகளின் அறிவுத்திறன் மட்டம் குறைவடைதல், உடல் வளர்ச்சி குறைதல், கதைப்பதிலும் கேட்பதிலும் குறைபாடுகள் ஏற்படுதல் போன்றவை நிகழலாம்.
  • அதேபோல, குழந்தைகளின்  உடம்பில் அயடின் குறைந்தால், கிரெட்டினிசம் (Cretinism) எனப்படும் நிலை ஏற்பட்டு, உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைவடையலாம்.
  • கர்ப்ப காலத்தில் அயடின் குறைந்தால், திடீர் கருச்சிதைவுகள், குழந்தை இறந்து பிறத்தல் மற்றும் கருவின் மூளை வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படலாம்.

 இலங்கையில் அயடின் குறைபாட்டைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள பிரதான நடவடிக்கை தான், உப்பில் அயடினைக் கலந்து சந்தைக்கு வெளியிடுவதாகும்.

ஆயினும், இந்த உப்பில் உள்ள அயடின் முழுமையாக உங்கள் உடலுக்குக் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இந்த விடயங்களைச் செய்ய வேண்டும்:

  •  உணவில் சேர்ப்பதற்கு முன்னதாக உப்பைக் கழுவ வேண்டாம்.
  •  உணவு சமைத்த பிறகு மட்டுமே உணவில் உப்பைச் சேர்க்கவும்.

உப்பைக் கழுவினாலோ அல்லது சமைக்கும் போதே உப்பைச் சேர்த்தாலோ, உப்பில் உள்ள அயடினின் ஒரு பகுதி அழிந்துவிடுகிறது.

  • உப்பைச் சேமித்து வைக்க பழுப்பு (brown) நிற கண்ணாடி பாத்திரங்கள் போன்ற இருண்ட பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
  • அத்துடன், உப்பு சேமித்து வைத்துள்ள பாத்திரத்தை சூரிய வெளிச்சம் படாத ஒரு இடத்தில் வைக்கவும்.

இதைத் தவிர, அயடின் அதிகமாக உள்ள உணவு வகைகள்:

சூடை மீன், நெத்தலி மீன், இறால், நண்டு போன்ற கடல் மீன் வகைகள்.

அதேபோல் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அயடின் குறைபாட்டைத் தடுக்க உதவும்.

இந்த அறிவுரைகளின்படி உடலுக்குத் தேவையான அயடினைச் சரியாகப் பெற்றுக் கொண்டால், பல நோய்களைத் தடுத்து சுறுசுறுப்பான ஆரோக்கியமான வாழ்வை உங்களால் வாழ முடியும்.

More to read

MedTalks

© 2026 MedTalks. All rights reserved.
Health simplified your way
menu